Thursday, January 22, 2026

TEST

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் டிட்வா புயல் (ம) வடகிழக்கு பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை ரூ.1503.78 கோடி செலவில் மறுசீரமைக்கும் பணிகளுக்காக நிருவாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தரமான மற்றும் பாதுகாப்பான சாலை வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. பல நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், சமீபத்திய டிட்வா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாகவும் ஏராளமான சாலைகள் சேதமடைந்துள்ளன.

"உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களின் போதும், சிறப்பு வார்டு சபா கூட்டங்களின்போதும் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைக்கக் கோரி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து சேதமடைந்த நகர்ப்புர மறுசீரமைக்குமாறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது. சாலைகளை எனவே, அரசு மேற்காணும் கோரிக்கைகளை கவனத்துடன் கருத்தில் கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை ரூ.1503.78 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

TEST

  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் டிட்வா புயல் (ம) வடகிழக்கு பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை ...